உலக நீரிழிவு மாதத்தில் NCD பரிசோதனை கிளினிக்கை செயற்படுத்தியதன் மூலம் “ஆரோக்கியமான வாழ்க்கையை” வழங்கும் ஹேமாஸ் மருத்துவமனை

சுகாதாரத் துறையில் சர்வதேச ACHSI தரத்தை எட்டிய இலங்கையின் முதல் தனியார் மருத்துவமனை சங்கிலியான Hemas மருத்துவமனைக் குழுமம், உலக நீரிழிவு மாதத்தை முன்னிட்டு பள்ளியாவத்தை பகுதியில் உள்ள மீனவ சமூகத்தினருக்காக அண்மையில் விரிவான நீரிழிவு மற்றும் தொற்றாத நோய்களுக்கான சிகிச்சையகத்தை (Clinic) நடத்தியது.

X-Press Pearl அனர்த்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மீனவ சமூகங்களை மேம்படுத்துவதற்காகவே ஆரம்பிக்கப்பட்ட மீன்பிடி ஊக்குவிப்பு சமூக பொறுப்புணர்வு செயற்பாட்டு (CSR) திட்டத்தின் இரண்டாவது திட்டமாக இந்த சிகிச்சையகம் அமைந்திருந்தது.

அருட்தந்தை அஜித் திசேரா அவர்களின் ஆசீயுடன் பள்ளியாவத்தை மவுண்ட் கார்மல் தேவாலயத்தில் சிகிச்சையகம் நடைபெற்றது. 250க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச நீரிழிவு மற்றும் NCD பரிசோதனை மற்றும் தொடர்புடைய சிகிச்சையை வழங்குவதன் மூலம் 250க்கும் மேற்பட்டவர்கள் பலப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்தியாவசிய மருத்துவ சேவையை வழங்குவதற்கான இந்த அணுகுமுறை அனைத்து உள்ளூர் மக்களாலும் மிகவும் பாராட்டப்பட்டது.

“COVID-19 தொற்றுநோய்களின் போது நீரிழிவு போன்ற தொற்றாத நோய்கள் வேகமாகப் பரவுவது ஒரு பெரிய சுகாதாரப் பிரச்சினையாகும். சர்வதேச நீரிழிவு சம்மேளனத்தின் படி, இலங்கையில் 12 பேரில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இலங்கை மக்கள் மத்தியில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உருவாக்குவதே எமது நோக்கமாகும்.

எனவே, இந்த உலக நீரிழிவு மாதத்தில், ‘மீன்பிடி ஊக்குவிப்பு’ செயற்பாட்டின் அனுசரணையில் நீரிழிவு மற்றும் தொற்றாத நோய் கண்டறிதல் கிளினிக்குகளை வெற்றிகரமாக நடத்துவது குறித்து நாங்கள் பாக்கியமாக கருதுவதுடன், X-Press Pearl அனர்த்தத்திலிருந்து விடுபடுவதற்கு இன்னும் போராடிக்கொண்டிருக்கும் எங்கள் மக்களை வலுப்படுத்தவும் ஊக்குவிக்கவும் முடிந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.”

“நீரிழிவின் தாக்கத்தின் தீவிரத்தை தினசரி அடிப்படையில் அனுபவிக்கும் ஒரு பொறுப்புள்ள சுகாதாரத் தலைவராக, இந்த அமைதியான அச்சுறுத்தலின் விளைவுகளைத் தணிக்க நாங்கள் தொடர்ந்து முதலீடு செய்வோம்.” என டொக்டர் லகித் பீரிஸ், ஹேமாஸ் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகக் குழுமத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் தெரிவித்தார்.

2021ஆம் ஆண்டு சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு ஹேமாஸ் குழும தொடக்கத்திற்கு சமாந்திரமாக, மீன்வள ஊக்குவிப்பு நீரிழிவு கிளினிக் மூலம் பொதுமக்களுக்கு அவர்களின் வாழ்க்கையை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் எவ்வாறு தங்கள் உடல் நலனைக் ககவனித்துக் கொள்வது மற்றும் நிர்வகிப்பது என்பது குறித்த விளிப்புணர்வை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.

ஹெல்த்கேர் தரநிலைகளுக்கான ஆஸ்திரேலிய கவுன்சிலால் (ACHSI) சான்றளிக்கப்பட்ட இலங்கையில் தற்போது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை வலையமைப்பாக Hemas Hospitals குழுமம் திகழ்கிறது மற்றும் பாதுகாப்பு, தரம் மற்றும் சிறந்த மருத்துவ விளைவுகளுக்கான சர்வதேச மருத்துவமனை அங்கீகாரத்தின் தங்க முத்திரையாக உள்ளது.

உலக சுகாதார அமைப்பின் (WHO) வழிகாட்டுதல்களின் அடிப்படையில் நிறுவப்பட்ட கோவிட்-19 பாதுகாப்பு செயல்பாடுகள் சுகாதார நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிப்பது பற்றிய விரிவான மற்றும் பலதரப்பட்ட. படிமுறை தணிக்கையைத் தொடர்ந்து, ஹேமாஸ் மருத்துவமனைகள் குழுமத்திற்கு SLS 1672: 2020 சான்றிதழை SLSI வழங்கியது. ஹேமாஸ் மருத்துவமனைகள் ஆய்வகங்களும் ISO 15189 (2012 சான்றிதழ்) பெற்றுள்ளது.

Video thumbnail
இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவுக்கு அழைத்துவரப்பட்ட ரஞ்சன்
01:37
Video thumbnail
கேஸ் விபத்துக்கள் குறித்து மௌனம் காக்கும் அரசாங்கம்
01:38
Video thumbnail
“எதிர்வரும் நாட்களில் நீர் மின் உற்பத்தி வீழ்ச்சியடையும் நிலையில்”
01:41
Video thumbnail
“தனது இரு குழந்தைகளை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய தந்தை கைது”
01:42
Video thumbnail
உலக சாதனையுடன் அசத்தும் அட்டன், கொட்டகலை சிறுவன்
04:02
Video thumbnail
அதிவேகமும், அவசரமும் உயிரைப் பறிக்கும்!
01:11
Video thumbnail
அடிப்படை வசதிகளுக்காக அல்லாடும் பிள்ளைகளும், ஆசிரியர்களும்!
04:21
Video thumbnail
பசறை பிரதேச சபைக்கு முன்பாக போராட்டம்
03:11
Video thumbnail
“எதிர்வரும் மூன்று வாரங்களில் நாட்டில் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அதிகரிக்கலாம்”
01:36
Video thumbnail
தற்போதைய பிரச்சினைகளுக்கு கடந்த அரசாங்கங்கள் பொறுப்பல்ல - வஜிர அபேவர்தன
00:32

Related Articles

Latest Articles