உலகப் பொருளாதார மன்றத்தின் 56ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (19) அதிகாலை சுவிட்சர்லாந்து நோக்கிப் பயணமானார்.
ஜனவரி 19 முதல் 23ஆம் திகதி வரை ‘A Spirit of Dialogue’ எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெறவுள்ள இம்மாநாட்டில், கொள்கை வகுப்பாளர்கள், புத்தாக்கச் சிந்தனையாளர்கள் மற்றும் உலகளாவிய தலைவர்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய, பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தவுள்ளார்.
பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்ணான்டோ மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் பிரதமருடன் சென்றுள்ளனர்.
