ஊடகர் சமுதித்தவின் வீடுமீது தாக்குதல் – விசாரணை கோருகிறது ஐக்கிய மக்கள் சக்தி

அரசு ஊடக அடக்குமுறையை ஆரம்பித்துவிட்டதா என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி இன்று எழுப்பியுள்ளது.

அத்துடன், ஊடகவியலாளர் சமுதித்தவை இலக்குவைத்து, அவரின் வீடுமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என குறிப்பிட்ட அவர், ஊடக அடக்குமுறையை அரசு கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அதேவேளை, ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கமீது மேற்கொள்ளப்பட்ட முட்டை தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் மறைக்கப்பட்டுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Latest Articles