எங்கே எங்கள் ரூ. 1,700? பொகவந்தலாவை நகரில் போராட்டம்!

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி பொகவந்தலாவை நகரிலும் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், இதொகாவின் அமைப்பாளருமான ரவி குழந்தை வேலுவின் ஏற்பாட்டில், நூற்றுக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் இப்போராட்டம் இடம்பெற்றது.

மக்கள் ஒன்றுதிரண்டு பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதிராக அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்குமாறு வலியுறுத்தி பொகவந்தலாவை நகரில் கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.

அதேவேளை, கொட்டகலை, மஸ்கெலியா ஆகிய நகரங்களிலும் சம்பள உயர்வுக்கான போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

 

Related Articles

Latest Articles