‘எச்சரிக்கையைமீறி பயணம்’ – விபத்துக்குள்ளானது மணல் டிப்பர்!

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா, குறுக்கு பாதையில் இன்று காலை ‘பெரிய ரக’ டிப்பரொன்று விபத்துக்குள்ளானது.

மஹியங்கனையில் இருந்து ஹட்டனுக்கு மணல் ஏற்றிவந்த டிப்பரே , இயந்திர கோளாறு காரணமாக இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

சாரதிக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

நானுஒயா குறுக்கு பாதையில் மணல் டிப்பர் போன்ற அதிக பாரம் சுமந்து வரும் வாகனங்கள் பயணிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles