என்பிபி அரசின் ஊழல் ஒழிப்பு சமருக்கு சந்திரிக்கா பாராட்டு

அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கையைப் பாராட்டியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, அந்த நடவடிக்கையைத் தவிர அரசாங்கத்திடம் வேறு கொள்கைகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை என விமர்சித்துள்ளார்.

இலங்கை சட்டக் கல்லூரியின் சமத்துவத்திற்கான முன்முயற்சியின் (Equality Initiative) VORTEX ஐந்தாவது தொகுதி வெளியீட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கை சிறப்பானது எனக் குறிப்பிட்ட அவர், அதற்கு அப்பால் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான தெளிவான கொள்கைகள் அரசாங்கத்திடம் இல்லை எனத் தனது அதிருப்தியை வெளியிட்டார்.

மேலும், ஒரு சமூகப் பிரிவினருக்கு எதிராக மற்றொரு சமூகப் பிரிவினரிடையே வர்க்க வெறுப்பைத் தொடர்ந்து வளர்ப்பதைத் தவிர அரசாங்கத்திடம் வேறு எதுவும் இல்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இளைஞர்கள் தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும் என வலியுறுத்திய சந்திரிகா, நாடாளுமன்றத்திலுள்ள அரசியல்வாதிகளோ அல்லது அரசியல் கட்சிகளோ தலைமைத்துவத்தை வழங்கும் வரை இளைஞர்கள் காத்திருக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

கொள்கைகள் இல்லாத அரசியல்வாதிகளுக்கு மக்கள் எவ்வாறு வாக்களிக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை இயற்கை வளங்களிலும் மனித வளங்களிலும் செழிப்பான நாடாக இருந்தபோதிலும், உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகத் திகழ்வதற்கு நாட்டில் சமத்துவத்தை ஏற்படுத்தவும், ஒரே தேசமாக ஒன்றிணையவும் முடியாமையே காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமைகள் குறித்தும் கேள்வி எழுப்பிய அவர், முந்தைய நாடாளுமன்றம் ஒன்றில் சுமார் 20 உறுப்பினர்கள் மாத்திரமே பட்டப்படிப்பை நிறைவு செய்திருந்ததாகவும், பெரும்பாலானோர் உயர்தரப் பரீட்சையைக்கூட நிறைவு செய்யவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles