எம்.பி. பதவியை துறந்தார் உத்திக பிரேமரத்ன!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பான பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கும், நாடாளுமன்ற செயலாளருக்கும் அவர் அனுப்பி வைத்துள்ளார்.
உத்திக பிரேமரத்ன 2020 பொதுத் தேர்தலில் அநுராதபுரம் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

விமல் வீரவன்ச தலைமையில் பாராளுமன்றத்தில் சுயேட்சையாக செயற்படும் குழுவில் தற்போது, உத்திக பிரேமரத்ன செயற்பட்டுவருகின்றார். இவரை இலக்கு வைத்து கடந்த செப்டம்பர் மாதம் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Latest Articles