மொனராகலை, வெல்லவாய – எல்லாவல நீர் வீழ்ச்சியில் நீராடச்சென்று காணாமல் போன நான்கு இளைஞர்களும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்று ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், இன்று ஏனைய மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டன.
சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக வெல்லவாய வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தனியார் கல்வி நிறுவனமொன்றில் பயிலும் 10 பேர் கொண்ட இளைஞர்கள் குழு ஒன்று, சுற்றுலாச்சென்று, நேற்று முன்தினம் முற்பகல் நீராடச் சென்றபோதே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
ராமு தனராஜா
