ஒன்றரை வயது பெண் குழந்தையை இறால் தொட்டிக்குள் தள்ளிய தாய்

கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக கணவனை பழிவாங்க தாய் ஒருவர் தனது ஒன்றரை வயது பெண் குழந்தையை இறால் தொட்டிக்குள் தள்ளியதாக உடப்புவ பொலிஸார் நேற்று தெரிவித்துள்ளனர்.

உடுப்புவ, கட்டகடுவ பிரதேசத்தில் உள்ள இறால் பண்ணையில் பணிபுரியும் தொழிலாளி ஒருவரின் மனைவியே இச் செயலை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் குழந்தையை இறால் தொட்டியின் அருகே அழைத்துச் சென்று பின்னர் இறால் தொட்டிக்குள் தள்ளி விட்டு பின்னர் எதுவும் தெரியாதது போன்று குழந்தையை தேடும் காட்சிகள் அங்கிருக்கும் சிசிடிவியில் பதிவாகியுள்ளமை பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மீட்டெடுக்கப்பட்ட குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக குருநாகல் போதனா வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கணவனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கணவனை பழிவாங்குவதற்காக குழந்தையை இறால் தொட்டிக்குள் தள்ளியுள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Articles

Latest Articles