ஓய்வூதியத்தை இழந்த 85 எம்.பிக்கள்!

நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டுள்ளதால் சுமார் 85 வரையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெறுவதற்குரிய தகுதியை இழந்துள்ளனர்.

நாடாளுமன்றத்துக்கு தெரிவாகும் உறுப்பினர் ஒருவர் ஐந்தாண்டுகள் பதவி வகித்த பின்னர், அவருக்கு எம்.பிக்களுக்குரிய சம்பளத்தில் மூன்றிலொரு பங்கு ஓய்வூதியமாக வழங்கப்படும்.

எனினும், நாடாளுமன்றத்தின் பதவிகாலம் முடிவடைவதற்கு முன்னர் சபை கலைக்கப்பட்டால் ஓய்வூதியம் வழங்கப்படமாட்டாது.

அந்தவகையிலேயே ஆளும் மற்றும் எதிரணிகளை சேர்ந்த சுமார் 85 வரையான எம்.பிக்கள் ஓய்வூதியத்தை இழந்துள்ளனர் என தெரியவருகின்றது.

அதேவேளை, தாம் ஆட்சிக்கு வந்தால் எம்.பிக்களுக்குரிய ஓய்வூதியம் இரத்து செய்யப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles