கட்டுநாயக்கவில் இருந்து கம்பளை வந்தவருக்கு கொரோனா!

கம்பளை, ஜயமாலபுர 2ஆம் ஒழுங்கையைச் சேர்ந்த நபரொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

கட்டுநாயக்கவில் தொழில்செய்த நிலையில் கடந்த 13 ஆம் திகதி விடுமுறையில் வீட்டுக்குவந்த நபருக்கே வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

குறித்த நபர் பீசீஆர் பரிசோதனைக்காக கடந்த 13 ஆம் திகதி கண்டி வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். எனினும், 14 ஆம் திகதியே அவரிடம் பீசீஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. இன்று பீசீஆர் பரிசோதனை முடிவு வெளியானது.

இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரின் குடும்ப உறுப்பினர்களும், ஜயமாலபுர பகுதியில் அவர் சென்ற வர்த்தக நிலையமொன்றை சேர்ந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த நபர் கொரோனா தடுப்பு முகாமுக்கு அழைத்துசெல்லப்பட்டுள்ளார்.

Paid Ad