கார் எங்கே? அரச ஊழியர்களுக்கு கடனுக்கு வழங்கப்படும் அரிசி!

அரச ஊழியர்களுக்கு வாகனம் வாங்குவதற்குரிய சூழல் உருவாக்கப்படும் எனக் கூறப்பட்ட ஆட்சியில் தற்போது 20 கிலோ அரிசியே கடன் தவணை அடிப்படையில் வழங்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் அமைச்சர் விமல்வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமது ஆட்சியின்போது அரசாங்க ஊழியர்களுக்கு சலுகை கடன் அடிப்படையில் மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது என்ன நடக்கின்றது? 20 கிலோ அரிசியை கடனுக்கு வாங்கும் நிலை அரச ஊழியர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ளது எனவும் விமல் வீரவன்ச விமர்சித்துள்ளார்.

Related Articles

Latest Articles