கண்டி மாபானாவத்துர பகுதியிலுள்ள வீடொன்றில் பிரபல நடிகை ஒருவரின் ஊடாக இயங்கி வந்ததாக கூறப்பட்ட விபசார நிலையமொன்றை கண்டி குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று சுற்றிவளைத்துள்ளனர்.
இச்சுற்றிவளைப்பில் நான்கு யுவதிகள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சினிமா நடிகை ஒருவரால் விபசார மையம் நடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரியவருகின்றது.
அவருக்கு இதில் நேரடி தொடர்பு இருப்பதாக உறுதி செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீட்டை வாடகைக்கு எடுத்த நபரொருவர் அங்கு விபசார நிலையமொன்றை நடாத்தி வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவரிடம் பல கஞ்சா பக்கட்டுகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அனைவரும் நேற்றுமுன்தினம் (13) கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
