கண்டி, மகியாவ முதியோர் இல்லத்தில் 47 பேருக்கு கொரோனா – மூவர் பலி!

கண்டி, மகியாவ பகுதியிலுள்ள முதியோர் இல்லமொன்றில் 47 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இருவர் நேற்றும் மேலும் ஒருவர் இன்றும் உயிரிழந்துள்ளனர்.

மேற்படி முதியோர் இல்லத்தில் 63 பேர் தங்கியுள்ளனர் என சுகாதார அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கொவிட் தொற்றுக்குள்ளான முதியோரில் பெரும்பாலானோருக்கு வேறு நோய்கள் காணப்படுவதாகவும், பாதிக்கப்பட்டவர்களை வைத்தியசாலைகளில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles