கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளுக்கு புதிதாக விதித்த இறக்குமதி வரியை ஒரு மாதத்திற்கு, இடைநிறுத்தம் செய்வதாக, அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு, 25 சதவீத வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
அத்துடன், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு, கூடுதலாக, 10 சதவீத வரி விதிக்கப்படும் எனவும் அவர் கூறி இருந்தார்.
கூடுதல் வரி விதிப்பால் மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் கடும் அதிருப்தி அடைந்தன.
அமெரிக்க பொருள்களுக்கு, 25 சதவீத வரி விதிக்கப்படுவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதிலடி கொடுத்திருந்தார்.
இந்நிலையில் வரி விலக்கு அளிக்க கோரி, ட்ரம்பிடம் கனடா பிரதமர் மற்றும் மெக்சிகோ ஜனாதிபதி ஆகியோர் தொலை பேசியில் தொடர்பு கொண்டு வலியுறுத்தினர்.
இதன் பிறகு, கனடா, மெக்சிகோ நாடுகளுக்கு புதிதாக விதித்த இறக்குமதி வரியை ஒரு மாதத்திற்கு, இடைநிறுத்தம் செய்வதாக, அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.