கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொலை! நீதிமன்ற வளாகத்தில் பயங்கரம்!!

பாதாள குழு தலைவரான கனேமுல்ல சஞ்ஜீவ என்றழைக்கப்படும் சஞ்சீவ சமரக்கோன் நீதிமன்றத்துக்குள் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

புதுக்கடை 5ஆம் இலக்க நீதிமன்றத்தினுள்ளே மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்திலேயே அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான கனேமுல்ல சஞ்சீவ இன்று(19) முற்பகல் வழக்கொன்றுக்காக நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டு சாட்சிக்கூண்டில் நிறுத்தப்பட்ட போதே சுட்டுக்கொல்லப்பட்டார்.

சட்டத்தரணி போன்று வேடமிட்டு நீதிமன்றுக்குள் இருந்த சந்தேகநபர் துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தலைமறைவாகியிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி நீதிமன்றத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டுக்கு பிறகு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட கனேமுல்ல சஞ்சீவ, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவத்துக்கு பிறகு நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்குரிய தேடுதல் வேட்டை இடம்பெறுகின்றது.

Related Articles

Latest Articles