கம்பளையில் கொரோனா கொத்தணி! மேலும் 25 பேருக்கு வைரஸ் தொற்று!!

கம்பளை பிரதேசத்தில் மேலும் 25 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் நேற்று (20.12.2020) அடையாளம் காணப்பட்டனர்.

கம்பளை நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் ஏழு பேருக்கும், தொலுவ சுகாதார பிரிவில் மூவருக்கும், உடபளாத்த சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 15 பேருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளமை பிசிஆர் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொற்றாளர்கள் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்பில் இருந்த சுமார் 300 பேர் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடமும் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்படவுள்ளன.

கம்பளை வைத்தியசாலையில் பணிபுரியும் பெண் வைத்தியரொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து அவரின் குடும்ப உறுப்பினர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதன்போது அவரின் தாய், தந்தை மற்றும் மேலும் ஒரு குடும்ப உறுப்பினருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து பெண் வைத்தியரின் தந்தைக்கு உரித்தான கோழிக்கடையில் தொழில்செய்யும் ஊழியர்களிடம் பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்போதும் சிலருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. இந்நிலையில் நேற்று மேலும் சிலருக்கு தொற்று உறுதியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து கம்பளை நகரில் எட்டு கோழிக்கடைகள் மூடப்பட்டுள்ளன. ஏனைய சில வர்த்தக நிலையங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கம்பளை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருவதால் சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறு பொது மக்களிடம் சுகாதார அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles