கலாநிதி பட்டம் பெற்று மலையக மண்ணுக்கு பெருமை சேர்ந்த ஆசிரியர்கள்

ஹட்டன் பிரதேச ஆசிரியர்கள் ஐவர், கல்வி மற்றும் முகாமைத்துவத் துறைகளில் கலாநிதி பட்டம் பெற்று, மலையகத்துக்கும் ஹட்டன் மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் ஆசிரியர் செல்லையா குமார், கொட்டகலை கேம்ரிஜ் கல்லூரியின் ஆசிரியர் வேலுப்பிள்ளை ரமேஸ்குமார், பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் முத்தையா கிருஸ்ணகுமார், நுவரெலியா கல்விவலயத்தின் ஆசிரிய ஆலோசகர் வேலுசாமி ஸ்ரீகுமார், கொத்மலை
கல்வி வலயத்தின் கோட்டக் கல்விப் பணிப்பாளர் மாரிமுத்து சுப்ரமணியம் இங்கர்சால் ஆகியோர் அண்மையில் வெளிநாட்டு பல்கலைக்கழகம்
ஒன்றினூடாக கலாநிதி பட்டத்தை பெற்றுள்ளனர்.

இவர்கள் கலாநிதி பட்டத்தை பெறுவதற்கும் இவர்களின் ஆய்வுக்கும் வழிகாட்டியாகவும் வளவாளர்களாகவும் செயற்பட்ட கலாநிதி பொன்னம்பலம்
சிங்கரட்ணம், கலாநிதி சுப்ரமணியம் தனபாலன், கலாநிதி
எஸ்.தெய்வேந்திரன், கலாநிதி சந்திரகுமார் ஆகியோர் இவர்களால் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வு ஹட்டன் அஜந்தா வரவேற்பு மண்டபத்தில் திங்கட்கிழமை (16) நடைபெற்றது. இதன்போது கலாநிதி பொன்னம்பலம் சிங்கரட்ணத்துக்கு
கலாநிதி பட்டம் பெற்ற ஆசிரியர்களால் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மலையகம் தொடர்பான பிரச்சினைகளை ஆய்வுக்கு உட்படுத்தி, பயன் வாய்ந்த முன்மொழிவுகளை உரிய தரப்பினருக்கு வழங்குவதற்கு பூரண முடிவுகளும் இவர்களால் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பி.கேதீஸ்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles