” களனி பல்கலைக்கழகத்தின் கணினி மற்றும் தொழில்நுட்ப பீடம் 12 மாதங்களாக பெறுபேறுகளை வழங்கவில்லை”

களனி பல்கலைக்கழகத்தின் கணினி மற்றும் தொழில்நுட்ப பீடம் 12 மாதங்களாகப் பரீட்சைக்கான பெறுபேறுகளை வழங்கவில்லையென்றும், இதனால் மாணவர்கள்  கடுமையான சிரமங்களுக்கு முகங்கொடுத்திருப்பதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்தார்.

இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவது தொடர்பில் பொருத்தமான பரிந்துரைகளை மேற்கொள்வதற்கான பாராளுமன்ற விசேட குழு  அமைச்சர்  (கலாநிதி) விஜயதாச ராஜபக்ச தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

உயர்கல்வி தொடர்பில் காணப்படும் அக்கறைகள் மற்றும் இதனை விஸ்தரிப்பதற்கான சாத்தியமான முன்மொழிவுகளை ஆராயும் நோக்கில் இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவது தொடர்பில் பொருத்தமான பரிந்துரைகளை மேற்கொள்வதற்கான பாராளுமன்ற விசேட குழு முன்னிலையில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைக்கப்பட்டிருந்தது.

கல்வி என்பது உரிமையாக இருக்க வேண்டுமே தவிர சலுகை அல்ல என்பதை வலியுறுத்திய அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர், உயர்கல்வி அமைப்பில் உள்ள குறைபாடுகள் காரணமாக எழும் அழுத்தங்களை தாங்க முடியாமல் பல மாணவர்கள் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், பேராதனை இணை சுகாதார விஞ்ஞான பீடம் இன்னும் கல்விக்கான நாட்காட்டியை முன்வைக்கவில்லை என்றும் சப்ரகமுவ பல்கலைக்கழகம் இன்னும் பரீட்சைகளை நடத்தவில்லை என்றும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

உயர்கல்வித் துறையில் காணப்படும் விடயங்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு உயர்கல்வி அமைச்சு, அனைத்துப் பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள் மற்றும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மாணவர் பிரதிநிதிகளை இக்குழு முன்னிலையில் அழைப்பதற்கும் குழு தீர்மானித்தது…

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles