காசாவில் பட்டினியால் 23 இலட்சம் பேர் பரிதவிப்பு

காஸா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களால், கடந்த மூன்று மாதங்களாக உணவு கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. குழந்தைகள் கடுமையான பசியில் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

காஸாவின் வடக்கு பகுதியில் இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 16 வீதத்தினர் ஊட்டச் சத்து குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

மருத்துவமனைகளில் குறைந்த எடை கொண்ட குழந்தைகள் மற்றும் பசிப்பிணியில் சிக்கிய குழந்தைகள் அதிகரித்து வருகின்றன.

இஸ்ரேலின் தடைகள் மற்றும் பாதுகாப்பு சிக்கல்கள், உதவித் திட்டங்களை செயல்படுத்துவதில் பெரும் முட்டுக்கட்டையாக உள்ளன. இதனால், மக்கள் தினசரி உணவுப் பொருட்கள், குறிப்பாக மாவு மற்றும் பிற அடிப்படை தேவைகளுக்காக போராடுகின்றனர்.

உணவைக் கட்டுப்படுத்தி மக்கள் மீது அழுத்தம் செலுத்தும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் பட்டினியின் கொடுமையை மேலும் மோசமாக்குகின்றன.

காஸாவில் வசிக்கும் 23 லட்சம் மக்களும் பசியின் விளிம்பில் உள்ளதாகவும், இது,மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு எனவும் ஐக்கிய நாடுகள் சபை வேதனை தெரிவித்துள்ளது. மேலும், காஸாவை உலகின் மிகப்பெரிய பசிப்பரப்பு என்றும் அறிவித்துள்ளது.

Related Articles

Latest Articles