கிணற்றில் தவறி வீழ்ந்து 3 வயது சிறுவன் மரணம்

கிணற்றில் தவறி வீழ்ந்து மூன்று வயது சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்தான்.

இந்தச் சம்பவம் யாழ். பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லிபுரம் – திருமாள்புரம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை நண்பகல் இடம்பெற்றது.

அதே இடத்தைசச் சேர்ந்த ரஜிவன் சுஜித் என்ற சிறுவனே உயிரிழந்தான்.

சிறுவன் கிணற்றில் வீழ்ந்த நிலையில் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோது உயிரிழந்தான்.

மேற்படி சிறுவன் வீட்டு முற்றத்தில் பலூனுடன் இருந்து விளையாடிய வேளை குறித்த பலூன் உடைந்த நிலையில் கிணற்றில் காணப்படுகின்றது.

பலூன் கிணற்றில் வீழ்ந்த நிலையில் அதனை மீட்க முற்பட்டபோது சிறுவன் தவறி வீழ்ந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

சடலம் மரண விசாரணைக்காகவும், பிரேத பரிசோதனைக்காகவும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles