குடிநீருக்காக ஏங்கும் பாடசாலை! நடவடிக்கை எடுப்பாரா ஜீவன்?

மனிதன் உயிர்வாழ்வதற்கான அத்தியாவசிய தேவைகளில் நீரும் பிரதானமாகும். எனினும், நு/ சென்கிளையர் தமிழ் மகா வித்தியாலயத்தில் 23 ஆண்டுகளுக்கு மேலாக நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை.

நுவரெலியா மாவட்டத்தில் 475 சி டெவன் கிராம சேவகர் பிரிவில் தலவவாகலைக்கு அண்மையில்லேயே குறித்த பாடசாலை அமைந்துள்ளது.

குடிநீர் இன்மையால் சுமார் 500 இற்கு மேற்பட்ட மாணவர்களும், 30 இற்கு மேற்பட்ட ஆசிரியர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் பிரசித்தி பெற்ற இரு நீர்வீழ்ச்சிகளான சென்கிளியர் மற்றும் டெவன் நீர்வீழ்ச்சிகளுக்கு அருகாமையில் இந்தப் பாடசாலை அமைந்துள்ளது. எனினும், இப்பாடசாலைக்கு சுத்தமான குடிநீர் இல்லை.

தற்போது நீர்வழங்கல்துறை அமைச்சராகவும் மலையகத்தை சேர்ந்த ஒருவரே இருக்கின்றார்.

எனவே, பாடசாலைக்கு குடிநீரை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோரும், பழைய மாணவர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related Articles

Latest Articles