குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பதவி விலக தயார் – கொட்டகலை பிரதேச சபை தலைவர் அறிவிப்பு

” எனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் நான் வகிக்கின்ற பிரதேச சபைத் தலைவர் பதவி உட்பட இ.தொ.கா. வில் வகிக்கும் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகிக் கொள்ளத் தயாராகவே இருக்கீன்றேன்.”

இவ்வாறு கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் தெரிவித்தார்.

கொட்டகலை பிரதே சபையில் நடைபெற்ற மாதாந்த அமர்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

 பத்தனை சந்தியில் அமைக்கப்பட்டுள்ள கடைத் தொகுதி சம்பந்தமாக சமூக வலைத் தளங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. கடைத் தொகுதிகள் அரசாங்க நிதியையோ மாகாண சபை, பிரதேச சபை நிதியையோ கொண்டு கட்டப்பட்டதல்ல. இது பிரதேச சபை நிதிக் குழுவினால் உறுதிப்படுத்தப்பட்டு அட்டன் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு அந்த இடத்தை பிரதேச சபைக்குப் பெற்றுத் தருமாறு பிரதேச செயலாளருக்கும், காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கும் கடிதங்கள் அனுப்பி  வைக்கப்பட்டுள்ளன.

மேலும்   கொட்டகலை பிரதேச சபை கடந்த 4 ½  வருடங்களாக மக்களுக்கு சிறந்த சேவையாற்றி வந்துள்ளது. மத்திய மாகாணத்தில் சிறந்த சபையாக அங்கீகரிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்த சபையின் கௌரவத்தைப் பாதிக்கக் கூடிய வகையில் நான் செயற்பட்டது கிடையாது. சபைக்கு அவப்பெயர் ஏற்பட இடம் கொடுக்கவும் மாட்டேன்.

பிரதேச சபைத் தலைவர் என்ற ரீதியில் இலஞ்ச ஊழலில் சிக்கியிருந்தால், அது கணக்குப் பரிசோதனை ஊடாக ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படும் பட்சத்தில் பிரதேச சபைத் தலைவர் பதவியிலிருந்தும் இ.தொ.கா.வில் நான் வகிக்கும் சகல பொறுப்புகளிலிருந்தும் விலகிக் கொள்ளத் தயாராக இருக்கின்றேன். எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடுவேன். மக்கள் செல்வாக்கோடு பெரும்பான்மை வாக்குகளால் நிச்சயம் வெற்றி பெறுவேன்.”  என்றார்.

க.கிஷாந்தன்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles