சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கூடியது. இதன்போதே மேற்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்தவாரமளவில் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.










