உள்ளுராட்சிசபைத் தேர்தலில் கொட்டகலை பிரதேச சபையில் 5 உறுப்பினர்களை இதொகா பெற்றுள்ளது. அக்கட்சிக்கு 9,165 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
8,770 வாக்குகளைப் பெற்ற தேசிய மக்கள் சக்தி சார்பிலும் சபைக்கு ஐவர் தெரிவாகியுள்ளனர்.
8,719 வாக்குகளைப் பெற்ற ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் நால்வர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
ஜனநாயக தேசியக் கூட்டணி, ஈரோஸ் ஜனநாயக முன்னணி என்பவற்றில் இருந்து தலா ஒரு உறுப்பினர் வீதம் தெரிவாகியுள்ளனர்.