அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த ஏப்ரல் மாதம் எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, இருநாடுகளும் முதல்முறையாக பரஸ்பரம் ஏவுகணைகளை வீசித் தாக்கியதைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலையின் அளவுகோலாகக் கருதப்படும் பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை 4.5% உயர்ந்து ஒரு பேரல் 97.30 டாலராக (£73) விற்பனையாகிறது.
அதே நேரத்தில், அமெரிக்க வர்த்தக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4.3% அதிகரித்து ஒரு பேரல் சுமார் 94.50 டாலராக உயர்ந்துள்ளது.
இந்தத் தாக்குதல்கள் இருநாடுகளுக்கும் இடையிலான போர் முழு அளவிலான தீவிரமடைவதைக் குறிக்கிறதா என்று இப்போதே கூறிவிட முடியாது என்றும், இருப்பினும் உலகளாவிய எண்ணெய் சந்தைக்கான ஆபத்துகளை வர்த்தகர்கள் மீண்டும் கணிக்கத் தொடங்கியுள்ளனர் என்றும் ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் ஜியாஜியா யாங் தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமையன்று ஆசிய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன, குறிப்பாகத் தென் கொரியாவின் முதன்மைப் பங்குச்சந்தைக் குறியீடான கோஸ்பி (Kospi) கிட்டத்தட்ட 8% வரை சரிவைக் கண்டுள்ளது.










