பூனாகல பகுதியில் புகுந்த காட்டு யானை: கடை மற்றும் வீடுகளுக்கு சேதம்
பதுளை மாவட்டம், லியன்கஹவெல காவல் துறை எல்லைக்குட்பட்ட பூனாகல – உடஹேன பகுதிக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று அப்பகுதியில் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
காட்டு யானையின் இந்தத் தாக்குதலில் ஒரு வர்த்தக நிலையமும் (கடை), நான்கு வீடுகளும் பலத்த சேதமடைந்துள்ளன.
எனினும், இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என லியன்கஹவெல காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
(த. டிமேஷன்)










