கொட்டகலை, கொமஷல் அமைதிபுரம் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டமானது இன்றைய தினம் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கொட்டகலை பிரதேச சபையின் உபதலைவர் ஜேசுதாசன் யாகுலமாரியின் வேண்டுகோளுக்கு இணங்க பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்தினால் முன்வைக்கப்பட்ட வேலைத்திட்ட முன்மொழிவினூடாக மாகாண சபை நிதியத்தில் ரூ. 20 இலட்சம் நிதி இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த் , உபதலைவர் ஜேசுதாசன் யாகுலமாரி , பிரதேச பொதுமக்கள் என்போர் கலந்துகொண்டனர்.










