‘கொரோனா பரவல்’ – மக்கள் வங்கியின் ஹட்டன் கிளைக்கு பூட்டு!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் வங்கியின் ஹட்டன் கிளை காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது என்று குறித்த வங்கியின்  முகாமையாளர் ஆர்.எம்.ஆர்.எம்.ரத்தநாயக்க தெரிவித்தார்.

வங்கியில் கடமை புரியும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு வைரஸ் தொற்று உறுதியான நிலையில், வங்கி ஊழியர்கள் கடந்த வெள்ளியன்று பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் ஏழு பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்தே வங்கி மூடப்பட்டுள்ளது.

வங்கி முகாமையாளருக்கு வைரஸ் தொற்றவில்லை.

அதேவேளை, வாடிக்கையாளர்களின் நலன் கருதி தன்னியக்க சேவைகளை முடிந்தளவு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்திருப்பததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கே. சுந்தரலிங்கம், ஹட்டன்

 

Related Articles

Latest Articles