‘கொரோனா’ பிடியிலிருந்து மீண்டார் அக்கரபத்தனை பிரதேச சபை தவிசாளர்!

‘கொரோனா’ வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளர் கதிர்ச்செல்வன், சிகிச்சையின் பின்னர் முழுமையாக குணமடைந்து இன்று (30) வீடு திரும்பினார்.

அக்கரபத்தனை பிரதேச சபை தவிசாளருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து அவர் அம்பாந்தோட்டையிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு சிகிச்சைக்காக அனுப்பட்டார்.

அவர் பங்கேற்ற அரச நிகழ்வுகளில் கலந்துகொண்ட வி.ஐ.பிக்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

பிசிஆர் பரிசோதனை முடிவு வெளிவருவதற்கு முன்னர் பொதுவெளியில் நடமாடியதால் கதிர்ச்செல்வனை இடைநிறுத்தியுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கவுள்ளதாக அறிவித்தது.

இந்நிலையில் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ள கதிர்ச்செல்வன், தனது செயலுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

தகவல் : நீலமேகம் பிரசாந்த்

Related Articles

Latest Articles