கொழும்பு – பதுளை சொகுசு ரயில் சேவை நாளை ஆரம்பம்

கொழும்பு – பதுளைக்கிடையிலான அதி சொகுசு ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்து வசதிகளை கவனத்திற்கொண்டு அமைச்சர் பந்துல குணவர்தனவின் ஆலோசனைக்கமைய இந்த அதிசொகுசு ரயில் சேவை ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாளை சனிக்கிழமை முதல் இந்த ரயில் சேவை ஆரம்பிக்கப்படுவதுடன் தொடர்ந்து பிரதி சனிக்கிழமைகளிலும் அதிகாலை 5.30 மணிக்கு கொழும்பிலிருந்து பதுளை நோக்கி ரயில் சேவை இடம்பெறுமென்றும்.

பி.ப 3.55 மணிக்கு அது பதுளை ரயில் நிலையத்தை சென்றடையுமென்றும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த அதிசொகுசு ரயில் கம்பஹா, வெயாங்கொடை, பொல்கஹவலை, ரம்புக்கணை, பேராதனை, கண்டி, நாவலப்பிட்டி, நானுஓயா, ஹப்புத்தளை, தியத்தலாவை, பண்டாரவளை, எல்ல மற்றும் பதுளை ரயில் நிலையங்களில் நிறுத்தப்படுமென்றும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இந்த ரயில் மு.ப 9.50 மணிக்கு கொழும்பை நோக்கி புறப்படுவதுடன் இரவு 7.20 மணிக்கு அது கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையுமென்றும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ரயில் பயணத்தின் போது இடைநடுவில் காணக்கிடைக்கும் இரசனை மிக்கதும் இயற்கை எழில் மிக்கதுமான பிரதேசங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு அவற்றைப் பார்வையிடுவதற்காக நிறுத்தப்படுமென்றும் ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்தது.

Related Articles

Latest Articles