கொழும்பு, விவேகானந்தா கல்லூரியின் மாபெரும் புத்தாக்கக் கண்காட்சி நாளை (04) ஆம் திகதி முதல் (06) ஆம் திகதிவரை பாடசாலையில் நடைபெறவுள்ளது.
கல்லூரி அதிபர் சி.ரவிச்சந்திரிக்கா தலைமையில் நடைபெறவுள்ள இக் கண்காட்சிக்கு, பிரதம விருந்தினராக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த கலந்துகொள்ளவுள்ளார்.
சிறப்பு விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், கொழும்பு வலயக் கல்விப் பணிப்பாளர் ஜீ.என்.சில்வா ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
நாளை (04) திகதி கொழும்பிலுள்ள ஏனைய பாடசாலை மாணவர்களுக்காக கண்காட்சியொன்றும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏனைய இரண்டு தினங்கள் சமூகத்தினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களும் காலை 09 மணிமுதல் மாலை 05 மணி வரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியில் பயனுள்ளவிடயங்கள் இடம்பெறுவதால் அதனைக் கண்டுகளித்து, பயன் பெறுமாறு கல்லூரி அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.










