பதுளையில் சென் ஜோன் அம்புலன்ஸ் ஆசிரியர் பயிற்சி நிறைவு – 22 பேருக்கு சான்றிதழ்

பதுளையில் சென் ஜோன் அம்புலன்ஸ் ஆசிரியர் பயிற்சி நிறைவு – 22 பேருக்கு சான்றிதழ்கள்

பதுளை மாவட்ட சென் ஜோன் அம்புலன்ஸ் படையணியினால் ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட இரு நாள் பயிற்சி நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதன் இறுதிநாளில் நடைபெற்ற செய்முறை மற்றும் எழுத்துப் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற 22 ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும், மீள்பயிற்சி செயலமர்வும் பதுளை தமிழ் மகளீர் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வு, மேற்படி படையணியின் பதுளை மாவட்ட உதவி ஆணையாளர் எஸ். பிரபாகரன் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. பயிற்சியின் பயிற்றுனர்களாக அவர் செயல்பட்டதுடன், மொனராகலை மாவட்ட ஆணையாளர் டி.எம். சரத்குமார அவர்களும் இணைந்து பயிற்சிகளை வழங்கினர்.

நிகழ்வின் பிரதம விருந்தினராக ஊவா மாகாண ஆணையாளர் ஜனாப் ஏ.எச்.எம்.இக்பால் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும், வித்தியாலய அதிபர் சுபாஷி என பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்த பயிற்சி மூலம் ஆசிரியர்கள் அவசர நிலைமைகளில் முதுதவி சேவைகளை திறம்பட வழங்கும் திறன்களைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

— நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Latest Articles