தோட்டத்தில் கூலிப்படை வேண்டாம்: 05 ஆம் திகதி கொழும்பில் போராட்டம்!

“தோட்டத்தில் கூலிப்படை வேண்டாம்” என வலியுறுத்தும் “ “நீலகாமம் சாத்வீகப் போராட்டம்” எதிர்வரும் மே 05 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில், தொழிலாளர் குடியிருப்பொன்று அடித்து நொறுக்கப்பட்டிருந்தது.

தோட்ட நிர்வாகத்தின் பாதுகாப்பு பிரிவு எனக் கூறி புகுந்த கறுப்பு ஆடை கும்பலே இந்த செயலில் ஈடுபட்டது.

இச்சம்பவம் மலையகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நீலகாமம் தோட்டத்தில் கடந்த சனிக்கிழமை விசேட கூட்டமொன்று நடைபெற்றது.

அரசியல் பிரமுகர்கள், சிவில் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். இதன்போது நீலகாமம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles