கோட்டாவின் உரை தொடர்பில் 3 நாட்கள் விவாதம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்க உரைமீது நாடாளுமன்றத்தில் இன்றும், நாளையும், நாள மறுதினமும் விவாதம் இடம்பெறவுள்ளது.

9 ஆவது நாடாளுமன்றத்தின் 2ஆவது கூட்டத்தொடரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

ஜனாதிபதியின் கொள்கை விளக்கஉரை முடிவடைந்த பின்னர் நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இதன்படி நாடாளுமன்றம் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடும். ஆரம்பக்கட்ட சபை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், சபை ஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதம் ஆரம்பமாகும்.மாலை 6 மணிவரை விவாதம் தொடரும்.

நாளை மற்றும் நாளை மறுதினமும் விவாதம் இடம்பெறவுள்ளது.

Related Articles

Latest Articles