‘சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல் உச்சம்’

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல் கடுமையாக இருப்பதாக பெங்களூரு விக்டோரியா அரச வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

மூச்சுத்திணறலால் பெங்களூரு அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி ஆனது. அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்தியர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பெங்களூரு விக்டோரியா அரச வைத்தியசாலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல் கடுமையாக இருக்கிறது.

சசிகலா அதிதீவிர நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். ரத்த அழுத்தம், நீரிழிவு, தைராய்டு போன்ற பிரச்சனைகளும் சசிகலாவுக்கு உள்ளன.

சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.” -என்றுள்ளது.

Paid Ad