சஜித் பிரேமதாசவை அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடுவதற்கு ஐக்கிய மக்கள் கூட்டணி இன்னும் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என குறித்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
எனினும், கட்சியென்ற அடிப்படையில் தமது கட்சி வேட்பாளரை தீர்மானிக்கும் உரிமை ஐக்கிய மக்கள் சக்திக்கு உள்ளது எனவும் மனோ சுட்டிக்காட்டியுள்ளார் என சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன் அடிப்படையிலேயே தமது கட்சி வேட்பாளரை ஐக்கிய மக்கள் சக்தி தெரிவுசெய்திருக்ககூடும் எனவும் மனோ சுட்டிக்காட்டினார். எனினும், ஐக்கிய மக்கள் சக்தி அவ்வாறானதொரு முடிவை எடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை களமிறக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
