‘சந்திரமுகியால் தற்போதும் கதறி அழும் நடிகை’

ரஜினியின் சந்திரமுகி படத்தில் நடிப்பதற்காக இரண்டு முறை வாய்ப்புகள் தேடி வந்ததாக நடிகை சதா சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

‘ஜெயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சதா, அந்த ஒரே படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். ‌

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘அந்நியன்’ படத்தில் நாயகியாக வந்து பரபரப்பாக பேசப்பட்டார். தொடர்ந்து தமிழ்பட உலகின் முன்னணி நாயகியாக வலம் வந்தார். பின்னர் பட வாய்ப்பு இல்லாததால் ஒரு பாடலுக்கு ஆடும் அளவு இறங்கி வந்தார். தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார்.

ரஜினியின் சந்திரமுகி பட வாய்ப்பை நழுவவிட்டது குறித்து நடிகை சதா, சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். சந்திரமுகி படத்தில் நடிப்பதற்காக இரண்டு முறை வாய்ப்புகள் தேடி வந்தும் சில சூழல்கள் காரணமாக, அதில் நடிக்க முடியாமல் போனது. அதை நினைத்து நான் சில சமயம் அழுதும் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்

சதா, மாளவிகா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அவரை அழைத்ததாக கூறப்படுகிறது

Paid Ad
Previous article‘கை கொடுத்தது மழை – தோல்வியிலிருந்து தப்பியது இலங்கை அணி’
Next articleயூரோ கிண்ணம் – 25 ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து அரைஇறுதிக்கு தகுதி