நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரல் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பதற்காக நாடாளுமன்ற விவகாரம் தொடர்பான குழுவின் விசேட கூட்டமொன்று நாளை 3 ஆம் திகதி மாலை 2.00 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் தலைமையில் நடைபெறுக் இக்கூட்டத்தில் கட்சி தலைவர்களும், பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர்.
9ஆவது நாடாளுமன்றத்தின் 3 ஆவது கூட்டத்தொடர் கடந்த 27 ஆம் திகதி இடைநிறுத்தப்பட்டது. இந்நிலையில் 4 ஆவது கூட்டத்தொடர் 8 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. அன்றைய தினம் ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை இடம்பெறும்.
இந்நிலையில் 08 ஆம் திகதி அமர்வு அதன் பின்னரான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சம்பந்தமாக இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன.










