சர்வதேசத்தின் மேற்பார்வையில் சர்வஜன வாக்கெடுப்பைக் கோருகிறார் விக்கி!

தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பது தொடர்பாக சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையின் கீழ் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை வடக்கு கிழக்கில் நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு இதுவே சரியான சந்தர்ப்பம் என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இடைக்காலக் கணக்கறிக்கை பற்றிய விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய விக்னேஸ்வரன், ஒற்றை ஆட்சியின் கீழ் பொருளாதார நலன்கள் மட்டுமே தமிழ் மக்களுக்கு வேண்டும் என்று அவர்கள் தீர்மானித்தால் தான் அரசியலில் இருந்து உடனே விலகுவதாகவும் குறிப்பிட்டார்.

இல்லைனில் எமது தலைவர்கள் புதிதாகச் சிந்தித்து அரசியல் மேதகைப் பண்புகளுக்குரிய முடிவுகளை எடுத்து தமிழர்களின் இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஆகவே, தமிழர்களுக்கான அதிகாரத்தையும் அங்கீகாரத்தையும் தாருங்கள் என்றும் தாம் ஏனையோருடன் இணைந்து இந்த நாட்டை அமைதியும் செழிப்பும் மிக்கதாக ஆக்குவோம் என்றும் விக்னேஸ்வரன் கூறினார்.

நாட்டில் இனப்பிரச்சினை என்ற ஒன்றே இல்லை என்று ஜனாதிபதி மற்றும் அரசாங்க தரப்பினர் மேற்கொண்டுவரும் வாதங்களுக்கு தக்க பதிலடி கொடுத்த விக்னேஸ்வரன், சுதந்திரத்துக்கு பின்னர் மாறிமாறி ஆட்சிக்கு வந்த இரண்டு கட்சிகளுமே இனப்பிரச்சனை இருக்கின்றது என்பதை ஏற்றுக்கொண்டே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டன என்பதையும் சுட்டிக்காட்டினார்.

Related Articles

Latest Articles