‘சர்வதேச பிடிக்குள் இருந்து நாட்டை மீட்டரே மங்கள’

” நெருக்கடியான காலகட்டத்தில் – சர்வதேசப் பிடிக்குள் இருந்து எமது நாட்டை மங்கள சமரவீரவே மீட்டெடுத்தார்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” அமரர் மங்கள சமரவீர மரணித்து இன்றுடன் மூன்று மாதங்கள் ஆகின்றன. இந்த நாட்டுக்காக சேவையாற்றியவர் அவர். நாட்டுக்கு எதிராக சர்வதேச அழுத்தங்கள் குவிந்திருந்தன. மின்சார கதிரைக்கு கொண்டுபோகபோவதாக மஹிந்த தரப்பு அறிவிப்புகளை விடுத்துவந்தன.

இவ்வாறான நெருக்கடியான சூழ்நிலையில் சர்வதேச சமூகத்துடன் பேச்சுகளை நடத்தி, பொறிக்குள் இருந்து நாட்டை மீட்டவர்தான் மங்கள. இதற்காக அவருக்கு நன்றிகூற வேண்டும். நாட்டுக்கு பைசர் தடுப்பூசிகளை பெற்றுக்கொடுப்பதிலும் தீவிரமாக செயற்பட்டவர்.” – என்றும் ஹர்ஷ குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles