சாம்சுங்கின் மேம்படுத்தல் திருவிழா பெருவாரி மக்களின் விருப்புக்கிணங்க நீடிக்கப்பட்டுள்ளது

இலங்கையின் முதலாவதும் மிகப்பாரியதுமான வீட்டு மேம்படுத்தல் (Upgrade) திருவிழாவானது, கிளச்சியூட்டும் சலுகைகள் மற்றும் இலகு கொடுப்பனவு திட்டங்களைக் கொண்டது

இலங்கையின் முன்னணி நுகர்வோர் இலத்திரனியல் வர்த்தக நாமமான சாம்சுங், தமது பாரிய வரவேற்பைப் பெற்றுள்ள மேம்படுத்தல் (Upgrade) திருவிழா, பெருவாரியான மக்கள் கோரிக்கைக்கு இணங்க 2022 ஜனவரி மாத இறுதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் அறிவித்துள்ளது.

நத்தார் பண்டிகைக் காலத்தில் தமது வாடிக்கையாளர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட திருவிழா, 2022 புத்தாண்டு காலத்திலும், மேலும் அதிக வாடிக்கையாளர்கள் தமது வீட்டை சிறந்த தொழில்நுட்பத்தில் மேம்படுத்துவதற்காக நீடிக்கப்பட்டுள்ளது. சாம்சுங் Electronics அனைத்து இலங்கை குடும்பங்களையும் பிரீமியம் சாம்சுங் தொழில்நுட்பத்திற்கு மேம்படுத்தும்.

நவம்பர் 5 தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சித் திட்டம், இப்போது ஜனவரி 31, 2022 வரை செல்லுபடியாகும். ‘மேம்படுத்தல் (Upgrade) திருவிழா’ ஆனது ரூ.140 மில்லியன் மதிப்புள்ள தேர்ந்தெடுப்பட்ட வீட்டுப் பாவனைப் பொருட்களுக்கு ரூ.5000 வரையிலான வவுச்சர்கள் உட்பட இலவச Sound bars மற்றும் மைக்ரோவேவ் உள்ளிட்ட bundle packs ஐ வழங்குகிறது. கவர்ச்சிகரமான கட்டணத் திட்டங்களுடன் இணைந்த இந்த அற்புதமான சலுகைகள் Softlogic, Singer, Singhagiri, Damro, Samsung e-Storeஇல் கிடைக்கின்றன.

மேம்படுத்தல் (Upgrade) திருவிழாவுக்கு மக்களிடமிருந்து கிடைத்த பாரிய வரவேற்பின் காரணமாகவே அதன் காலத்தை நீடிக்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. மேம்படுத்தல் திருவிழாவின் மேலான பயன்களை மேலும் அதிக நுகர்வோர் அனுபவிக்க வேண்டும், இதன் வவுச்சர்கள், bundle ஆஃபர்கள் மற்றும் இலகு கொடுப்பனவு ஆகியவற்றின் கூடுதல் நன்மையுடன், வாழ்க்கையை எளிதாக்கும் புதுமையான தயாரிப்புகளை அவர்கள் அனுபவிக்க அனுமதிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனவுகள் எல்லையில்லாதவை. சாம்சுங் எலெக்ட்ரானிக்ஸ் தொடர்ந்து மகிழ்வான வசதியான வாழ்க்கைக்கான எதிர்காலத்தை தொடர்ந்தும் மீளக் கண்டடைகின்றது. இந்த சாதனங்கள் இதுவரை அறியாத தளத்தை ஆராயும் தகுதியைக் கண்டறிவதோடு, தமது வாக்குறுதிகளைக் காப்பாற்றவும் செய்கின்றன.

மேம்படுத்தல் திருவிழா மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட சாம்சுங் தொலைக்காட்சிகள், குளிர்சாதனப் பெட்டிகள், வாஷிங் மெஷின்களில் ரூ.2,500 முதல் ரூ.5,000 வரையிலான வவுச்சர்களை நீங்கள் பெறலாம். மேலும் பண்டல் ஆஃபராக ரூ.99,999 மற்றும் அதற்கு அதிக மதிப்புள்ள Sound barஐ பெறுவதற்கான வாய்ப்பும் கிடைக்கிறது.

விஷுவல் டிஸ்ப்ளே வணிகத்தில், Samsung Electronics 2021ம் ஆண்டில் தொடர்ந்து 15 வது ஆண்டாக உலகளாவிய தொலைக்காட்சி சந்தையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சாம்சங்இ புதிய நுகர்வோர் வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்கும் அதிநவீன தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் TV துறையில் முன்னணியில் உள்ளதோடு, 15 வருடங்களாக தொழில்துறையில் முன்னணி கண்டுபிடிப்புகளை உறுதிப்படுத்துகிறது. சாம்சுங் இந்தத் துறையில் நிலைத்தன்மைக்கான முயற்சிகளைத் தொடர்கிறது, மாற்றுத்திறனாளிகள் மற்றும் நிறக் குறைபாடுள்ள பயனர்களுக்கான அணுகலை மேம்படுத்தும் தயாரிப்புகளையும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புக்களையும் அறிமுகப்படுத்துகிறது.

இதன் QLED 8K TV மற்றும் Crystal UHD 4K TV ஆகியவை அற்புதமான தொழில்நுட்பம் மற்றும் வேறெங்கும் இல்லாத பார்வை அனுபவத்தை வழங்குகின்றன. அத்துடன் Windfree மற்றும் 5 in 1 தர குளிரூட்டிகள் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட Curd Maestro குளிர்சாதனப் பெட்டி. உலகின் முதல் Frost Free குளிர்சாதனப் பெட்டி ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

சாம்சுங்கின் நுகர்வோருக்கான எலெக்ட்ரானிக்ஸ் முன்னென்றும் இல்லாத கோவிட்-19 தொற்றின்போதும் உறுதியாக நின்றதோடு, Omdia சந்தை ஆராய்ச்சி நிறுவனத்தின்படி தொடர்ந்து 15 வது ஆண்டாக உலகளாவிய தொலைக்காட்சி சந்தையில் அதன் நம்பர் 1 இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

பல புதிய கண்டுபிடிப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், அனைத்து நுகர்வோரும் தங்கள் தேவைகளுக்காக விடாமுயற்சியுடன் செயற்படும் நம்பகமான பிராண்டைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். இன்றைய நுகர்வோர் மிகவும் மாறுபட்ட விவேகமான ரசனைகளைக் கொண்டுள்ளனர். இந்த உயர்தர நுகர்வோர் தங்கள் தனிப்பட்ட ரசனைகளை சிறப்பாக பிரதிபலிக்கும் வகையில் தங்கள் வீடுகளை தனிப்பயனாக்கிக் கொள்ள விரும்புகிறார்கள். அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, சாம்சுங் அதன் விரிவாக்கப்பட்ட வீட்டு உபகரணங்களின் வரிசையை வடிவமைத்துள்ளது, இதனால் பயனர்கள் தங்கள் வீட்டு அலங்காரம் மற்றும் வாழ்க்கை முறை தேவைகளுடன் தனிப்பயனாக்கக்கூடிய  அம்சங்களின் மூலம் சாதனங்களை ஒத்திசைய அனுமதிக்கிறது.

Video thumbnail
இவர்களுக்கு கட்டாரில் தண்ணி கூட கிடைக்காது- முஜிபுர் ரஹ்மான் #tamilnews
02:29
Video thumbnail
GoHomeGota2022
47:02
Video thumbnail
கோட்டாபயவிற்கு முடியாது என்று அன்றே சொன்னோம்!
02:05
Video thumbnail
மீண்டும் ஒலித்தது "கோட்டா கோ கம "வில் சாணக்கியனின் உரை#gohomegota
02:33
Video thumbnail
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை தேடி CID நோக்கி வந்த ஆர்ப்பாட்டகாரர்கள்
01:15
Video thumbnail
ராமனோ ராவணனோ பிரச்சினை இல்லை என் மக்களே என் இலக்கு - ஜீவன்
08:29
Video thumbnail
பிரதமர் ரணிலுடன் தூதுவர்கள் சந்திப்பு சர்வதேச பொருளாதாரக் கூட்டமைப்பிற்கு ஏற்பாடு
00:45
Video thumbnail
Kuruvi News : பிரதமராக பதவியேற்றார் ரணில்!
01:33
Video thumbnail
கொழும்பின் தற்போதைய நிலை என்ன?
02:42
Video thumbnail
இசையமைப்பாளர் இராஜ் வீரரத்னவின் கிருலப்பனையிலுள்ள வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது!
02:10

Related Articles

Latest Articles