சிங்கப்பூர் ஜனாதிபதியாக தர்மன் சண்முகரத்னம் நாளை பதவியேற்பு

சிங்கப்பூரின் 9-வது ஜனாதிபதியாக தர்மன் சண்முகரத்னம் நாளை பதவியேற்கின்றார்.

சிங்கப்பூரில் கடந்த முதலாம் திகதி ஜனாதபதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் இலங்கை வம்சாவளி தமிழருமான தர்மன் சண்முகரத்னம் 70.4 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

இதை தொடர்ந்து, சிங்கப்பூரின் 9-வது ஜனாதிபதியாக அவர் நாளை (வியாழக்கிமை) பதவியேற்கிறார்.

பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. தர்மன் சண்முகரத்னம் இதற்கு முன், சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதி அமைச்சர், கல்வி அமைச்சர், துணை பிரதமர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles