சிரியா மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல்! இரண்டு விமான நிலையங்கள் இலக்கு!

சிரியாவின் இரண்டு பிரதான விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் அதிடிரத் தாக்குதல் நடத்தியுள்ளது.

சிரியாவின் Damacus மற்றும் Aleppo ஆகிய விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், இதனால் பிரதான ஓடுபாதைகள் சேதமடைந்துள்ளதாகவும் சிரியாவின் தேசிய ஊடகம் அறிவித்துள்ளது.

எதற்காக இந்த திடீர் தாக்குதல்

ஈரானின் வெளிவிவகார அமைச்சர் நாளை வெள்ளிக்கிழமை சிரியாவிற்கு வருகைதரவிருந்தார். நாளை வெள்ளிக்கிழமை உலக ஜிகாத் போராட்டத்திற்கு அமாஸ் அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில், தரைவழித் தாக்குதலை நடத்த இஸ்ரேல் லட்சக் கணக்கான இராணுவத்தை காசா எல்லையோரத்தில் குவித்துள்ளது.

இந்த அவசர நிலையில், ஈரான் மற்றும் சவுதித் தலைவர்கள் இன்று தொலைபேசி ஊடாக சுமார் 45 நிமிடங்கள் பேச்சு நடத்தியுள்ளனர்.

இஸ்ரேலுக்கு எதிராக அல்லது பலஸ்தீனத்திற்கு ஆதரவாக அணி திரள வேண்டுமென்று ஈரான் கோரியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அரபு நாடுகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈரான் இறங்கியுள்ள நிலையில், லெபானன், சிரியா, சவூதி அரேபியா ஆகிய நாடுகளுடன் பேச்சு நடத்துவதற்கே ஈரான் வெளியுறவு அமைச்சர் சிரியா செல்லவிருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஈரான் ளெியுறவு அமைச்சரின் பயணத்தைத் தடுப்பதற்கும், ஒரு எச்சரிக்கையாகவும் இஸ்ரேல் இந்தத் திடீர் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், நாளை வெள்ளிக்கிழமை உலக ஜிகாத் போராட்டத்தை விடுக்கப்பட்டுள்ள அழைப்பு மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles