சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு கோரிக்கை

சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு முன்னணி சீனி இறக்குமதியாளர்கள் சிலர் கோரியுள்ளனர்.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி அவர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

தற்போது சீனிக்கான கட்டுப்பாட்டு விலை அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் மீண்டும் சந்தையில் சீனியின் விலை அதிகரித்துள்ளது.

கடந்த நாட்களில் ஒரு கிலோகிராம் சீனியின் விலை 230 ரூபாய் வரை அதிகரித்திருந்தது.

இதனையடுத்து, நுகர்வோர் அதிகார சபையினால் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு குறித்த சீனி தொகை மீட்கப்பட்டதோடு அரசாங்கத்தினால் சீனிக்கான கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டது.

இதற்கமைய, வெள்ளை சீனி ஒரு கிலோகிராம் 122 ரூபாய் என கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டது.

இதேவேளை, சந்தையில் வெள்ளை சீனி இல்லை எனவும் சிவப்பு சீனி மாத்திரமே உள்ளதாகவும் சீனி இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்தினால் சீனி இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் டொலர் தட்டுப்பாடு காரணமாக இறக்குமதி தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles