சீரற்ற காலநிலையால் நுவரெலியாவில் இயல்புநிலை ஸ்தம்பிதம்

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் அம்பகமுவ,
கொத்மலை மற்றும் நுவரெலியா ஆகிய மூன்று பிரதேச செயலக பிரதேசங்களில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அம்பகமுவ பிரதேச செயலக பகுதியில் ஹட்டன், கினிகத்தேன, டிக்கோயா, நோர்வூட், பொகவந்தலாவை, மஸ்கெலியா, நோட்டன் போன்ற பிரதேசங்களில், தொடர் மழை காரணமாக சில இடங்களில் சிறு அளவிலான மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கொட்டக்கலை, தலவாக்கலை, அக்கரப்பத்தனை, டயகம, போடைஸ் , நானு ஓயா, நுவரெலியா, கந்தப்பளை பகுதிகளிலும் கடும் காற்றுடன் மழை பெய்துவருவதால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

மழை காரணமாக கந்தப்பளை, நுவரெலியா, டொப்பாஸ், சாந்திபுர, பம்பரகலை, பொரலாந்த பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கௌசல்யா.

Related Articles

Latest Articles