சீரற்ற காலநிலையால் 2 லட்சத்துக்கு மேற்பட்டோபர் பாதிப்பு!

🛑 17 மாவட்டங்களில் சீரற்ற காலநிலை

🛑 59,269 குடும்பங்களைச் சேர்ந்த 207,582 பேர் பாதிப்பு

🛑 ஒருவர் பலி: எட்டு பேர் காயம்: எழுவர் மாயம்
6 வீடுகள் முழுமையாகவும், 561 வீடுகள் பகுதியவும் சேதம்

🛑 10,137 பேர் இடைத்தங்கள் முகாம்களில் தங்கவைப்பு

…………

கடும் காற்று மற்றும் அடை மழையுடனான சீரற்ற காலநிலையால் நாட்டில் 17 மாவட்டங்களில் 59 ஆயிரத்து 629 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரத்து 582 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மண்மேடு சரிந்து விழுந்து பண்டாரவளையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 8 பேர் காயமடைந்துள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் எழுவர் காணாமல்போயுள்ளனர்.

6 வீடுகள் முழுமையாகவும், 561 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.
இடம்பெயர்ந்தவர்கள் இடைத்தங்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இடைத்தங்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

 

Related Articles

Latest Articles