சு.கவின் கோரிக்கை ஏற்பு! மாத இறுதியில் சர்வக்கட்சி மாநாடு!!

” இம்மாத இறுதியில் சர்வக்கட்சி மாநாட்டை நடத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் இணக்கம் வெளியிட்டனர்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்றக் குழுவினருக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச. நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச ஆகியோரும் சந்திப்பில் பங்கேற்றனர்.

இதன்போது ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியால் முன்வைக்கப்பட்ட 15 யோசனைகள் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

” நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் உள்ளடங்களாக சர்வக்கட்சி மாநாட்டை நடத்த வேண்டும் என்ற எமது யோசனை ஏற்கப்பட்டது. இதன்படி இம்மாத இறுதியில் குறித்த மாநாடு நடைபெறும். நாட்டை மீட்பதற்கான பொதுவான திட்டங்கள் இதன்போது ஆராயப்படும்.

இதற்கு இணையாக நிபுணர்கள் மாநாடும் நடத்தப்படும். அதில் சர்வமத தலைவர்களும் பங்கேற்பார்கள்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles