சூர்யா 42: 10 மொழிகளில் வெளியாகும் சூர்யாவின் படம்!

சூர்யா நடிக்கும் அவரின் 42 வது படம் 10 மொழிகளில் வெளியாகிறது என படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்பு ஐந்து நாட்கள் சென்னையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து வரும் 13-ஆம் தேதி இரண்டாம் கட்ட படப்பிடிப்பை கோவாவில் தொடங்க உள்ளனர். அதில் சுமார் 250 காட்சிகளை இயக்குனர் சிவா படமாக்குகிறார்.

இந்த நிலையில் படத்தின் மோஷன் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். வரலாற்று பின்னணியில் உருவாகும் அந்த படத்தில் அரந்தர், வெண்காட்டார், மண்டாங்கர், முக்காட்டார், பெருமனந்தார் ஆகிய பெயர்கள் பதிவிடப்பட்டுள்ளன. இது பாகுபலி படத்தில் இடம்பெற்ற மகிழ்மதி, குந்தலதேசம், காலகேயர்கள் போன்று ஒவ்வொரு நாடாகவோ அல்லது பிரிவாகவோ இருக்கும். அவர்களுக்கு மத்தியில் நடக்கும் போட்டி இந்தப் படத்தின் கதையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சிவாவின் படங்கள் வழக்கமாக குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இருக்கும். ஆனால் இந்த முறை அவர் வரலாற்று பின்னணியில் கதையை படமாக்குகிறார். அதை மோஷன் போஸ்டர் உறுதிப்படுத்தியுள்ளது. அதுவும் வேல், அம்புகளுடன் போர்களத்தை சூர்யா பார்க்கும் வகையில் நின்றுகொண்டு இருக்கிறார். இதனால் படம் எப்படி இருக்கும் என்ற ஆவல் சூர்யா ரசிகர்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.

மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டிருந்தாலும், தலைப்பு அறிவிக்கவில்லை.

Related Articles

Latest Articles