IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 44-வது லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்களைப் பெற்றது.
160 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணிக்குத் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் (11) விரைவில் வெளியேறினார்.
அதன் பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இம்பாக்ட் பிளேயராக வந்த கார்த்திக் சர்மா ஜோடி அதிரடியாக விளையாடி வெற்றியை எளிதாக்கியது.
சென்னை அணி 18.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 160 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடர் தோல்விகளால் மும்பை இந்தியன்ஸ் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது.










